eThirukkural

Thirukkural ebook, Thirukkural Tamil

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 944

குறள் 944:
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல, துய்க்க துவரப் பசித்து.

உரை
ஆசைக்கும் சுவைக்கும் அடிமையாகி அதிகமாக உண்ணாமல். உண்ட உணவு செரித்ததை அறிந்து, நன்றாகப் பசிக்கும்போது உடலுக்கு ஒத்துப்போகும் உணவை உட்கொள்வதை வாழ்க்கை நெறியாக கடைப்பிடிக்க வேண்டும்.

குறள் விளக்கம்
ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் முன்பு உண்ட உணவு செரிமானமாகி, மீண்டும் பசித்தால், உடலுக்கு ஒத்துக்கொள்ளும் நல்ல ஆரோக்கியமான உணவை மட்டும்தான் உட்கொள்வேன் என்பதை, வாழ்க்கை நெறியாகவே வைத்திருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

பிடித்த உணவாக இருந்தாலும், சுவையான உணவாக இருந்தாலும் பசி இல்லை என்றால் அதை உண்ண மாட்டேன் என்பதைக் கடைப்பிடித்தால், நோய்கள் உருவாக வாய்ப்பே இல்லை.

கடைப்பிடித்தல் என்பதற்கு இறுதிவரையில் பின்பற்றுதல் என்று பொருள்படும். பசித்தால் மட்டும் உண்ணும் பழக்கத்தை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையில் அனைவரும் இறுதிவரையில் பின்பற்ற வேண்டும் என்கிறார்.No comments:

Post a Comment