திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 945

குறள் 945:
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின், ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

உரை
வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடையாதவாறு, உடலுக்கு ஒத்துப்போகாத உணவை மறுத்து, உடலுக்கு நன்மை பயக்கும் உணவை மட்டும் உட்கொண்டால். இந்த உடலில் வாழும் உயிர் நோயினால் வேதனை அடையாது, துன்பத்தையும் அனுபவிக்காது.

குறள் விளக்கம்
வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடையாமல் இருக்க, உடலுக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான உணவை மட்டும் உண்டு. உடலுக்கு ஒவ்வாத உணவைத் தவிர்த்தால், அந்த உடலில் வாழும் உயிருக்கு எந்த வேதனையும் விளையாது என்கிறார். உடலில் வேதனைகள் உண்டானால் அந்த வேதனையை அனுபவம் செய்வது உயிர்தானே, அதனால் உயிரைக் குறிப்பிடுகிறார்.

புட்டியில், பைகளில் அடைத்த உணவுகளும், பிஸ்ஸா, பர்கர், பெப்சி, கோக் போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, நம் உடலுக்கு ஒத்துப் போகாத உணவுகளை உட்கொள்வதும், இன்றைய மனிதர்களுக்கு பல நோய்கள் உருவாக காரணமாக இருக்கிறது. இதைத்தான் திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிச்சென்றார்.Raja Mohamed Kassim

No comments:

Post a Comment