மருந்து அதிகாரத்தின் விளக்கம்

மருந்து என்ற அதிகாரத்தில், திருவள்ளுவர் மருந்தை பற்றி எதுவுமே கூறவில்லையே என்று சிலருக்கு கேள்விகள் தோன்றலாம். திருவள்ளுவர் கூறுவதை பின்பற்றினால் எந்த நோயும் அண்டாது என்பதால், அவர் எந்த மருத்துவமும் கூறவில்லை. ஒருவேளை நோய்கள் தோன்றினால் அதை எப்படி குணப்படுத்த வேண்டும் என்பதை மிக தெளிவாக கூறியுள்ளார்.

பசியில்லாமல் உண்பதால்தான் அனைத்து நோய்களும் உண்டாகிறது என்றால், கிருமிகளால் உண்டாகும் நோய்கள், தொற்றுநோய்கள் மற்றும் பரம்பரை நோய்களை பற்றி திருவள்ளுவர் ஒன்றுமே கூறவில்லையே என்றும் சிலருக்கு தோன்றலாம்.

உண்மை என்னவென்றால், தொற்றுநோய் என்று எதை கண்டும் நாம் அஞ்ச தேவையில்லை. இன்றைய விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் கூற்று என்ன?. மனிதனின் உடலில் எதிர்ப்புசக்தி குறையும்போதுதான் மனிதஉடலில் நோய்கள் தோன்றுகின்றது என்பதுதானே?. திருவள்ளுவர் கூறிய வழிமுறைகள், எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். அதனால் எந்த தொற்றுநோய்களும் தொற்றாது.

ஆங்கில மருத்துவத்தையும் ஆங்கில மருத்துவத்தை தழுவிய மருத்துவங்களையும் தவிர மற்ற எந்த பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் மனிதனின் நோய்களுக்கு கிருமிகள்தான் காரணம் என்று கூற மாட்டார்கள். இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமான சித்தமருத்துவம், ஆயுர்வேதம் போன்றவற்றிலும் மனிதனின் நோய்களுக்கு கிருமிகள் தான் காரணம் என்று கூறமாட்டார்கள்.

இன்று ஆங்கில மருத்துவத்தின் தாக்கத்தால் சில பாரம்பரிய மருத்துவங்கள், கிருமி கோட்பாட்டை தங்கள் மருத்துவங்களில் இணைத்துக்கொண்டன. இதற்கு காரணம், தங்கள் மருத்துவத்தை பற்றிய புரிந்துணர்வும், மனித உடலமைப்பை பற்றிய புரிந்துணர்வும் இல்லாததுதான். உண்மையில் கிருமிகளால் எந்த நோயும் உண்டாகாது.

சில குடும்பத்தில் பல குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரே வகையான நோய்கள் இருப்பதும், சில நோய்கள் பரம்பரையாக அந்த குடும்பத்தில் பிறப்பவர்களுக்கும் தொடர்ந்து வருவதற்கு காரணம். அந்த குடும்ப உறுப்பினர்களின் தவறான வாழ்க்கைமுறை மட்டுமே. திருவள்ளுவர் கூறியவற்றை பின்பற்றினால், எவருக்கும் எந்த வகையான நோயும் உண்டாகாது.

மேலே கூறப்பட்ட பத்து பாடல்களிலும் திருவள்ளுவர் திரும்ப திரும்ப கூறுவது ஒன்றைத்தான், பசி அறிந்து, பசி வந்த பின்பு, பசியின் அளவுக்கு ஏற்ப உணவு உற்கொண்டால் எந்த நோயும் அண்டாது என்பதைத்தான். நாமும் நம் குழந்தைகளும், குடும்பத்தாரும், தலைமுறையும் ஆரோக்கியமாக வாழ ஒரே எளிதான வழி பசித்து உண்பதுதான்.

பசித்து பசியின் அளவுக்கு உணவு உட்கொண்டு, உடலுக்கு தேவையான ஓய்வும், இரவில் முறையான தூக்கமும் தருபவருக்கு நோய்கள் உண்டாக வாய்ப்பேயில்லை.

நோய் கண்டவர்களும் பசி உண்டாக்கும் வரையில் உணவின்றி பட்டினியாக இருந்து, இரவில் நன்றாக தூங்கினால், எல்லா நோய்களும் தானாக குணமாகும். மருத்துவத்தின் பெயரால் வருந்திச்சேர்த்த பணத்தை வீணாக்காமல், உடலையும் மனதையும் நோகடிக்காமல், வாழ்க்கைமுறையை மாற்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

“வாழ்க வளமுடன்”

ராஜா முகமது காசிம்
http://healerrmk.blogspot.com

Raja Mohamed Kassim

No comments:

Post a Comment