eThirukkural

Thirukkural ebook, Thirukkural Tamil

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 950

குறள் 950:
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று, அப்பால் நாற்கூற்றே மருந்து.

உரை
நோயாளி, அந்த நோயை குணபடுத்தக் கூடிய மருத்துவன், நோயாளியின் நோய்க்குத் தக்க தரமான மருந்து, நோயாளியின் அருகில் இருந்து பரிவுடன் கவனித்துக் கொள்பவர், இவை நான்கும் செறுவதே முறையான மருத்துவமாகும்.

குறள் விளக்கம்
ஒரு நோயாளி முழுமையாக குணமாக நான்கு முக்கியமான விஷயங்கள் ஒன்றுசேர வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

நோயாளி, தன் நோயை அறிந்த, அந்த நோயை முழுமையாக குணப்படுத்த கூடிய மருத்துவரை அணுகி அவரை நோயாளி முழுமையாக நம்பவேண்டும். நோய்கண்டவரின் நோயை அறிந்து அதை முழுமையாகத் தீர்க்க வழி அறிந்த மருத்துவன்.

அந்த நோயாளியின் நோயைக் குணப்படுத்தக் கூடிய தரமான மருந்து. நோயாளியை பரிவுடன் கவனித்து, அன்பும் நம்பிக்கையும் தரக்கூடிய நபர். இவை நான்கும் சேரும்போது எவ்வளவு கடுமையான நோயாக இருந்தாலும், குணமாகும் என்கிறார் திருவள்ளுவர்.

இன்று பல நோயாளிகள், நோய்கள் குணமாகாமல் வாழ்நாள் முழுமைக்கும் நோயாளியாகவே இருப்பதற்குக் காரணம். உடலை அறியாத நோயாளி, நோயையும் நோயின் உண்மை காரணத்தையும் அறியாத மருத்துவர். உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பக்கவிளைவுகளை உண்டாக்கும் இரசாயன மருந்துகள். நோயாளிக்கு நம்பிக்கை கொடுக்க தவறிய உறவுகள்.


No comments:

Post a Comment