eThirukkural

Thirukkural ebook, Thirukkural Tamil

திருக்குறள் கூறும் மருத்துவம்

திருக்குறளின் மருந்து அதிகாரத்தில், மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ சில வழிமுறைகளையும், மனிதர்களுக்கு நோய்கள் உண்டாகும் காரணத்தையும், அந்த நோய்கள் வராமல் தடுக்கும் வழிமுறைகளையும். ஒருவேளை நோய்கள் உண்டானால் அவற்றை குணப்படுத்தும் வழிமுறைகளையும் கற்றுத்தருகிறார் திருவள்ளுவர்.

மருந்து அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறும் இந்த பத்து பாடல்களை புரிந்துகொண்டு வாழ்வில் கடைப்பிடித்தல். வாழ்நாள் முழுமைக்கும் எந்த நோயும் அண்டாமல் வாழலாம். ஒருவேளை தற்போது நோய் கண்டவராக இருந்தால் அனைத்து வகையான நோய்களும் நிச்சயமாக குணமாகும்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் எழுதிய மருந்து அதிகாரத்தின் குறள்களுக்கு, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப விளக்க உரை எழுத முயற்சி செய்கிறேன்.

அன்புடன்
ஹீலர் ராஜா முகமது காசிம்
healerrmk@gmail.com 

திருக்குறள் கூறும் மருத்துவம்

Download Links
Google Playbooks: http://bit.ly/2IIdI5k
Apple iBookstore: https://apple.co/2J9Gb4h
Kobo Books: http://bit.ly/2HcmzvK
Barnes and Noble: http://bit.ly/2J3mLOv
Smashwords: http://bit.ly/2IJS8xl

(Also available other ebook stores)திருக்குறள் கூறும் மருத்துவம்
அதிகாரம்: மருந்து
பாடல்கள்: 10
விளக்க உரை: ஹீலர் ராஜா முகமது காசிம்

முன்னுரை 
திருக்குறளின் மருந்து அதிகாரத்தில், மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ சில வழிமுறைகளையும், மனிதர்களுக்கு நோய்கள் உண்டாகும் காரணத்தையும், அந்த நோய்கள் வராமல் தடுக்கும் வழிமுறைகளையும். ஒருவேளை நோய்கள் உண்டானால் அவற்றை குணப்படுத்தும் வழிமுறைகளையும் கற்றுத்தருகிறார் திருவள்ளுவர்.

மருந்து அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறும் இந்த பத்து பாடல்களை புரிந்துகொண்டு வாழ்வில் கடைப்பிடித்தல். வாழ்நாள் முழுமைக்கும் எந்த நோயும் அண்டாமல் வாழலாம். ஒருவேளை தற்போது நோய் கண்டவராக இருந்தால் அனைத்து வகையான நோய்களும் நிச்சயமாக குணமாகும்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் எழுதிய மருந்து அதிகாரத்தின் குறள்களுக்கு, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப விளக்க உரை எழுத முயற்சி செய்கிறேன்.

அன்புடன்
ஹீலர் ராஜா முகமது காசிம்

குறள் 941:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர், வளிமுதலா எண்ணிய மூன்று.

உரை
பசியின் அளவுக்கு மிகுதியாக உண்பதும், உடலுக்குத் தேவையான பொழுது ஓய்வும் உறக்கமும் கொடுக்காமல் இருப்பதும் சித்தமருத்துவ நூல்கள் கூறும் வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடைந்து உடலில் நோய்கள் உருவாக காரணமாக இருக்கிறது.

குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்.

உரை
இதற்கு முந்தைய வேளையில் உண்ட உணவு முழுதாக செரித்து விட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்கு தக்க உணவு உட்கொண்டால். இந்த உடலை பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது.

குறள் 943:
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு, பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

உரை
அன்றாட வாழ்க்கைமுறை, செய்யும் தொழில் இவற்றுக்குத் தேவைப்படும் உடலின் சத்தும் ஆற்றலும் அறிந்து. அந்த உடலின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உணவை தேர்ந்தெடுத்து உண்பதே, இந்த உடல் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக இருக்க உதவும் வழியாகும்.

குறள் 944:
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல, துய்க்க துவரப் பசித்து.

உரை
ஆசைக்கும் சுவைக்கும் அடிமையாகி அதிகமாக உண்ணாமல். உண்ட உணவு செரித்ததை அறிந்து, நன்றாகப் பசிக்கும்போது உடலுக்கு ஒத்துப்போகும் உணவை உட்கொள்வதை வாழ்க்கை நெறியாக கடைப்பிடிக்க வேண்டும்.

குறள் 945:
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின், ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

உரை
வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடையாதவாறு, உடலுக்கு ஒத்துப்போகாத உணவை மறுத்து, உடலுக்கு நன்மை பயக்கும் உணவை மட்டும் உட்கொண்டால். இந்த உடலில் வாழும் உயிர் நோயினால் வேதனை அடையாது, துன்பத்தையும் அனுபவிக்காது.

குறள் 946:
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும், கழிபேர் இரையான்கண் நோய்.

உரை
உணவை பசியின் அளவுக்குக் குறைவாக உண்பவனிடத்தில் ஆரோக்கியம் நிலைத்து நிற்பது போல், பசியின் அளவுக்கு மிகுதியாக உண்பவனிடத்தில் நோய்கள் நிலைத்து நிற்கும்.

குறள் 947:
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின், நோயள வின்றிப் படும்.

உரை
தன் உடலுக்கு எந்த உணவு தேவை, எந்த அளவு தேவை என்பதை அறியாமல். அளவுக்கு அதிகமாக உண்பவனுக்கு அளவில்லா நோய்கள் உண்டாகும்.

குறள் 948:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்.

உரை
ஒருவர் உடலில் உள்ள நோயைக் குணப்படுத்த வேண்டுமாயின். அது என்ன நோய் என்பதை அறிந்து. அந்த நோய் உடலில் எங்கு எப்படி உருவானது என்பதை ஆராய்ந்து. அந்த நோயை குணப்படுத்தக்கூடிய மருத்துவத்தை அறிந்து. அந்த மருத்துவத்தை பிழையில்லாமல் முறையாக செய்ய வேண்டும்.

குறள் 949:
உற்றான் அளவும் பிணியளவும் காலமும், கற்றான் கருதிச் செயல்.

உரை
மருத்துவம் பயின்றவர்கள் நோயை முறையாக குணப்படுத்த. நோய்வாய்ப்பட்டவரின் உடல் நிலையை அறிந்து. நோய்வாய்ப்பட்டவரின் நோயின் தன்மை, நோயின் அளவு, நோயின் வீரியம் அறிந்து. அந்த நோயை குணப்படுத்த தகுந்த நேரம் காலம் பார்த்து. முறையாக மருத்துவம் செய்ய வேண்டும்.

குறள் 950:
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று, அப்பால் நாற்கூற்றே மருந்து.

உரை
நோயாளி, அந்த நோயை குணபடுத்தக் கூடிய மருத்துவன், நோயாளியின் நோய்க்குத் தக்க தரமான மருந்து, நோயாளியின் அருகில் இருந்து பரிவுடன் கவனித்துக் கொள்பவர், இவை நான்கும் செறுவதே முறையான மருத்துவமாகும்.

அதிகாரம்: மருந்து
பாடல்கள்: 10
விளக்க உரை: ஹீலர் ராஜா முகமது காசிம்

முன்னுரை 
திருக்குறளின் மருந்து அதிகாரத்தில், மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ சில வழிமுறைகளையும், மனிதர்களுக்கு நோய்கள் உண்டாகும் காரணத்தையும், அந்த நோய்கள் வராமல் தடுக்கும் வழிமுறைகளையும். ஒருவேளை நோய்கள் உண்டானால் அவற்றை குணப்படுத்தும் வழிமுறைகளையும் கற்றுத்தருகிறார் திருவள்ளுவர்.

மருந்து அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறும் இந்த பத்து பாடல்களை புரிந்துகொண்டு வாழ்வில் கடைப்பிடித்தல். வாழ்நாள் முழுமைக்கும் எந்த நோயும் அண்டாமல் வாழலாம். ஒருவேளை தற்போது நோய் கண்டவராக இருந்தால் அனைத்து வகையான நோய்களும் நிச்சயமாக குணமாகும்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் எழுதிய மருந்து அதிகாரத்தின் குறள்களுக்கு, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப விளக்க உரை எழுத முயற்சி செய்கிறேன்.

அன்புடன்
ஹீலர் ராஜா முகமது காசிம்
healerrmk.blogspot.com

குறள் 941:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர், வளிமுதலா எண்ணிய மூன்று.

உரை
பசியின் அளவுக்கு மிகுதியாக உண்பதும், உடலுக்குத் தேவையான பொழுது ஓய்வும் உறக்கமும் கொடுக்காமல் இருப்பதும் சித்தமருத்துவ நூல்கள் கூறும் வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடைந்து உடலில் நோய்கள் உருவாக காரணமாக இருக்கிறது.

குறள் விளக்கம்
வள்ளுவர் காலத்தில் சித்தமருத்துவம் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டதால் திருவள்ளுவர், சித்தமருத்துவத்தை மேற்கோள் காட்டுகிறார். மருத்துவர்கள் தவறுசெய்ய கூடும் என்பதால் சித்தமருத்துவர்கள் என்று உவமை சொல்லாமல், முறையாக வகுக்கப்பட்ட சித்தமருத்துவ நூல்களை உவமையாக காட்டுகிறார்.

பசிக்கு மிகுதியாக உண்பது செரிமான மண்டலத்தை சீர்கெடுக்கும். செரிமான மண்டலம் சீர்கேடு அடையும் போது, உண்ட உணவு வயிற்றில் அதிக நேரம் தேங்கி  கிடக்கும். வெளியில் பல நாட்கள் கிடந்த உணவு எப்படி அழுகி போகுமோ, அதைப்போல் செரிமானமாகாத உணவு வயிற்றுக்குள் கெட்டுப்போக தொடங்கும். உணவாக நாம் உட்கொண்டது கழிவாக மாற தொடங்கும், மற்றும்.

உடலில் சக்தி தட்டுப்பாடு அடையும்போது உடலில் சோர்வு உண்டாகும். உடலில் சோர்வோ அசதியோ ஏற்படும்போது உடலுக்கு ஓய்வு கொடுக்காமல், அதை அலட்சியம் செய்தாலும். உடலுக்கு இரவில் போதிய தூக்கம் கொடுக்காமல் இருந்தாலும். உடல் பலகீனமாகி உடலின் செயல்திறன் குறையும்.

உடலின் செரிமானதிறனும், செயல்திறனும் குறையும்போது, உடலில் சேரும் கழிவுகள் வெளியேற முடியாமல், கழிவுகள் உடலின் உள்ளேயே தேங்க தொடங்கும். அதனால் சித்த மருத்துவ நூல்கள் கூறுவது போல் வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடைந்து உடலில் நோய்கள் உருவாக்கும் என்கிறார்.

குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்.

உரை
இதற்கு முந்தைய வேளையில் உண்ட உணவு முழுதாக செரித்து விட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்கு தக்க உணவு உட்கொண்டால். இந்த உடலை பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது.

குறள் விளக்கம்
மனிதனின் அனைத்து நோய்களுக்கும் மூல காரணமாக இருப்பது உடலில் ஏற்படும் சக்தி குறைபாடும், உடலில் சேரும் கழிவுகளும் தான். செரிமானம் முறையாக நடக்காதப்பொழுது உண்ட உணவிலிருந்து உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது. செரிமானம் முறையாக நடக்காததால் செரிமானத்தின் பின் கழிவுகளும் முழுதாக வெளியேறாது.

அதனால்தான் திருவள்ளுவர் கூறுகிறார், முன் வேளையில் உண்ட உணவு செரித்து விட்டதா என்று அறிந்து, பசி உண்டான பின்பு அடுத்த வேளை உணவை உட்கொண்டால் எந்த மருந்தும் தேவைப்படாது என்று, காரணம் பசித்து உண்பவருக்கு உடலில் எந்த உபாதையும் தோன்றாது.

திருவள்ளுவர் மருந்தென கூறுவது நாம் இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தும் புட்டியில் அடைத்த, பதப்படுத்திய மற்றும் ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இரசாயன மருந்துகளை அல்ல. அவர் காலத்தால் பயன்பாட்டில் இருந்த, சித்தமருத்துவ மூலிகைகளை. அவர் காலத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டவை, எந்த  பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாத இலைகள், வேர்கள், பட்டைகள் மற்றும் தாவரங்கள் தான்.

இந்த மருந்துகளை நோயில்லாதவர்கள் உட்கொண்டால் கூட உணவாக செயல்படும், எந்த பாதகமும் உருவாக்காது. இப்படி உணவாக செயல்படக்கூடிய மூலிகைகள் கூட தேவையில்லை, பசித்து மட்டும் உண்டால் போது என்கிறார், திருவள்ளுவர்.குறள் 943:
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு, பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

உரை
அன்றாட வாழ்க்கைமுறை, செய்யும் தொழில் இவற்றுக்குத் தேவைப்படும் உடலின் சத்தும் ஆற்றலும் அறிந்து. அந்த உடலின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உணவை தேர்ந்தெடுத்து உண்பதே, இந்த உடல் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக இருக்க உதவும் வழியாகும்.

குறள் விளக்கம்
நமக்கு முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடும்போது, இன்றைய தலைமுறை மனிதர்களுக்கு பல நோய்கள் உண்டாவதற்கு காரணம், அவர்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை உண்பதுதான். ஒரு மனிதன் தன் உடலுக்குத் தேவையான சத்துக்களையும் அதை தரக்கூடிய உணவுகளையும் அறிந்து, பசியின் அளவுக்கு தக்க உணவு உட்கொண்டால், இந்த உடல் ஆரோக்கியமாக பல காலம் வாழ உதவும் என்கிறார் திருவள்ளுவர்.

தொலைக்காட்சி விளம்பரங்களையும், கடைகளின் அலங்காரத்தையும் பார்த்து ஏமாறாமல், நம் உடலுக்கு போதிய சக்தியை தரக்கூடிய உணவைத் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.குறள் 944:
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல, துய்க்க துவரப் பசித்து.

உரை
ஆசைக்கும் சுவைக்கும் அடிமையாகி அதிகமாக உண்ணாமல். உண்ட உணவு செரித்ததை அறிந்து, நன்றாகப் பசிக்கும்போது உடலுக்கு ஒத்துப்போகும் உணவை உட்கொள்வதை வாழ்க்கை நெறியாக கடைப்பிடிக்க வேண்டும்.

குறள் விளக்கம்
ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் முன்பு உண்ட உணவு செரிமானமாகி, மீண்டும் பசித்தால், உடலுக்கு ஒத்துக்கொள்ளும் நல்ல ஆரோக்கியமான உணவை மட்டும்தான் உட்கொள்வேன் என்பதை, வாழ்க்கை நெறியாகவே வைத்திருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

பிடித்த உணவாக இருந்தாலும், சுவையான உணவாக இருந்தாலும் பசி இல்லை என்றால் அதை உண்ண மாட்டேன் என்பதைக் கடைப்பிடித்தால், நோய்கள் உருவாக வாய்ப்பே இல்லை.

கடைப்பிடித்தல் என்பதற்கு இறுதிவரையில் பின்பற்றுதல் என்று பொருள்படும். பசித்தால் மட்டும் உண்ணும் பழக்கத்தை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையில் அனைவரும் இறுதிவரையில் பின்பற்ற வேண்டும் என்கிறார்.குறள் 945:
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின், ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

உரை
வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடையாதவாறு, உடலுக்கு ஒத்துப்போகாத உணவை மறுத்து, உடலுக்கு நன்மை பயக்கும் உணவை மட்டும் உட்கொண்டால். இந்த உடலில் வாழும் உயிர் நோயினால் வேதனை அடையாது, துன்பத்தையும் அனுபவிக்காது.

குறள் விளக்கம்
வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடையாமல் இருக்க, உடலுக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான உணவை மட்டும் உண்டு. உடலுக்கு ஒவ்வாத உணவைத் தவிர்த்தால், அந்த உடலில் வாழும் உயிருக்கு எந்த வேதனையும் விளையாது என்கிறார். உடலில் வேதனைகள் உண்டானால் அந்த வேதனையை அனுபவம் செய்வது உயிர்தானே, அதனால் உயிரைக் குறிப்பிடுகிறார்.

புட்டியில், பைகளில் அடைத்த உணவுகளும், பிஸ்ஸா, பர்கர், பெப்சி, கோக் போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, நம் உடலுக்கு ஒத்துப் போகாத உணவுகளை உட்கொள்வதும், இன்றைய மனிதர்களுக்கு பல நோய்கள் உருவாக காரணமாக இருக்கிறது. இதைத்தான் திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிச்சென்றார்.குறள் 946:
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும், கழிபேர் இரையான்கண் நோய்.

உரை
உணவை பசியின் அளவுக்குக் குறைவாக உண்பவனிடத்தில் ஆரோக்கியம் நிலைத்து நிற்பது போல், பசியின் அளவுக்கு மிகுதியாக உண்பவனிடத்தில் நோய்கள் நிலைத்து நிற்கும்.

குறள் விளக்கம்
பசியை அறிந்து, பசி வந்தபின்பு உண்பவன் எந்த நோய்க்கும் ஆளாகாமல், ஆரோக்கிய வாழ்வில் நிலைத்திருப்பான். அதைப்போல் பசியில்லாமல் ஆசைக்கும் இச்சைக்கும் ஆளாகி உண்பவன், அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் வரையில் நிரந்தர நோயாளியாகவே இருப்பான், என்கிறார் திருவள்ளுவர்.

பசியறிந்து பசியின் அளவுக்கு உண்பவனுக்கு எந்த நோயும் அண்டாததால் அவன் என்றுமே ஆரோக்கியமாக இருப்பான். ஆனால் பசியில்லாமல், பசியைவிட அதிகமாக உண்பவன் உடலில் நோய்கள் தோன்ற தொடங்கும். அவன் தன் நோய்களுக்கு என்னதான் வைத்தியம் பார்த்தாலும். அவனது நோய்களின் தன்மைகள் மாறுமே ஒழிய, நிரந்தரமாக உடலை விட்டு நீங்காது. அவன் நிரந்தர நோயாளியாகவே இருக்க நேரிடும்.

குறள் 947:
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின், நோயள வின்றிப் படும்.

உரை
தன் உடலுக்கு எந்த உணவு தேவை, எந்த அளவு தேவை என்பதை அறியாமல். அளவுக்கு அதிகமாக உண்பவனுக்கு அளவில்லா நோய்கள் உண்டாகும்.

குறள் விளக்கம்
நான் எந்த இனத்தைச் சார்ந்தவன்?, என் உடலமைப்பு எப்படிப்பட்டது?, என் உடலமைப்புக்கு ஏற்ற உணவு முறை எது?, என்று அறிந்து உண்பவர் ஆரோக்கியமாக இருப்பார். உடலமைப்புக்கு ஒவ்வாத உணவை உண்பவருக்கும், அளவுக்கு மிகுதியாக உண்பவருக்கும், பல நோய்கள் அண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

இன்றைய காலகட்டத்தில் வெளிநாடுகளில் இறந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு வகைகளை பலர் விரும்பு உண்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள். ஏதோ ஒரு குளிர் பிரதேசத்து அல்லது பாலைவனத்து மக்கள் உண்ணும் உணவு நம் மண்ணில் வாழும் மக்களுக்கு எவ்வாறு உகந்ததாக இருக்கும்?.

எல்லா உணவுகளும் சிறந்தவைதான் ஆனால் அவை அந்த அந்த தேசங்களில் வாழும் மக்களுக்காகவே வடிவமைக்கப்பட்டவை. ஒரு தேசத்து மக்களுக்கு மிக சிறந்த உணவாக இருக்கும் ஒரு பொருள் மற்ற தேச மக்களுக்கும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

குறள் 948:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்.

உரை
ஒருவர் உடலில் உள்ள நோயைக் குணப்படுத்த வேண்டுமாயின். அது என்ன நோய் என்பதை அறிந்து. அந்த நோய் உடலில் எங்கு எப்படி உருவானது என்பதை ஆராய்ந்து. அந்த நோயை குணப்படுத்தக்கூடிய மருத்துவத்தை அறிந்து. அந்த மருத்துவத்தை பிழையில்லாமல் முறையாக செய்ய வேண்டும்.

குறள் விளக்கம்
முந்தைய குறள்களில் நோய்கள் அண்டாமல் வாழ வழி சொல்லிய திருவள்ளுவர். அவற்றையும் மீறி நோய்கள் உண்டானால். அவற்றை குணப்படுத்திக்கொள்ள சில வழிமுறைகளை அறிவுறுத்துகிறார்.

நோய்க்கண்டவர், தனக்கு என்ன நோய் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அந்த நோய் அல்லது உடல் தொந்தரவு உண்டாக காரணமாக இருந்தது எது என்பதை ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும். அந்த உடல் உபாதையை குணப்படுத்த சரியான மருத்துவம் எது என்றும் கண்டுபிடிக்க வேண்டும். எல்லா மருத்துவங்களாலும் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியாது என்பதால் நோய்க்கு ஏற்ற மருத்துவத்தை நாடவேண்டும் என்கிறார் வள்ளுவர்.

உதாரணத்துக்கு இன்று பெரும்பாலான மக்கள் நோய்கள் குணமாகாமல் வேதனையில் இருக்கிறார்கள், இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, இன்றைய மனிதர்கள் உடலில் எந்த நோய் தோன்றினாலும், ஆங்கில மருத்துவத்தையே நாடுகிறார்கள். இதை தவறு என்கிறார் திருவள்ளுவர், உடலில் உண்டான உபாதைக்கு ஏற்ப, அதைத் தீர்க்க கூடிய மருத்துவத்தை மட்டுமே நாடவேண்டும் என்கிறார்.

நோயை குணப்படுத்தக் கூடிய மருத்துவத்தை கண்டுபிடித்து மருத்துவம் செய்யும் போதும், அந்த மருத்துவத்தை முறையாகச் செய்ய வேண்டும். அந்த மருத்துவர் கூறுவனவற்றை ஒழுக்கமாகப் பின்பற்ற வேண்டும். இதுதான் அனைத்து நோய்களையும் தீர்க்கும் வழிமுறை என்கிறார் திருவள்ளுவர்.
குறள் 949:
உற்றான் அளவும் பிணியளவும் காலமும், கற்றான் கருதிச் செயல்.

உரை
மருத்துவம் பயின்றவர்கள் நோயை முறையாக குணப்படுத்த. நோய்வாய்ப்பட்டவரின் உடல் நிலையை அறிந்து. நோய்வாய்ப்பட்டவரின் நோயின் தன்மை, நோயின் அளவு, நோயின் வீரியம் அறிந்து. அந்த நோயை குணப்படுத்த தகுந்த நேரம் காலம் பார்த்து. முறையாக மருத்துவம் செய்ய வேண்டும்.

குறள் விளக்கம்
இந்தக் குறளை மருத்துவர்களுக்காக திருவள்ளுவர் கூறுகிறார். ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளியை முழுமையாக குணப்படுத்த, சில படிநிலைகளை வழிகாட்டுகிறார்.

முதலில் நோயாளியின் மனநிலை, உடல் நிலை, வாழ்க்கை முறை அறிந்து. அவருக்கு வந்திருக்கும் நோயை அறிந்து, அந்த நோயின் தன்மை, அந்த நோயாளி நோயை அனுபவிக்கும் காலம், அந்த நோயின் வீரியம் போன்றவற்றை முதலில் ஆராயவேண்டும். இவற்றை அறிந்த பின்பு.

மருத்துவம் செய்ய தகுந்த சரியான காலம் அறிய வேண்டும். நோயாளியின் உடலின் மருத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் காலம், நோயாளிக்கு கொடுக்கும் மருந்தின் வீரிய காலம். நோயாளி வைத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் காலம். போன்றவற்றை ஆராய்ந்து, முறையாக மருத்துவம் கற்றவர் செயல்பட வேண்டும், அப்போதுதான் நோய்கள் முழுமையாகத் தீரும் என்கிறார் திருவள்ளுவர்.